பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும்.
இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB 4G டேட்டா இலவசமாக கிடைக்கும். இதுமட்டுமின்றி ஆக்சஸ் பேங்க் கார்டுகள் மூலம் வாங்கினால், 5 சதவிகித கூடுதல் கேஸ்பேக், ஹெச்டிஎப்சி கார்டுகளுக்கு, 750 ரூபாய் மற்றும் 5 சதவிகித கேஸ்பேக், ஆர்பிஎல் கார்டுக்ளுக்கனா இஎம்ஐ வசதிகளும் கிடைக்கிறது.

பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

அறிமுக சலுகையாக இந்த போன்களை நோ-காஸ்ட் இஎம்ஐ மூலம் மாதத்திற்கு 2,2997 ரூபாய் செலுத்தி பெற்றலாம். இதுமட்டுமின்றி வழக்கமான இஎம்ஐ ஆப்சன்களும் உள்ளன. இதுமட்டுமின்றி 1000 ரூபாய் சிறப்பு விலை சலுகையும் உள்ளது.

ரியல்மீ 2 ஸ்மார்ட் போன்களின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் வசதிகள்

ரியல்மீ 2 போன்கள் 6.2 இன்ச் HD+ டிஸ்பிளேகளுடன் 1520×720 பிக்சல் கொண்டதாக இருக்கும். இதுவே மிகவும் மலிவு விலை டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

1.8GHz கோல்காம் ஸ்நாப்டிராகன் 450 பிராசசர் கொண்டு இயக்கம் இந்த ஸ்மார்ட் போன்கள், ஆண்டிராய்டு 8.1 ஓரியோ உடன் மேற்புறமாக கலர் ஒஎஸ் 5.1 ஆபரேடிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இந்த டிவைஸ்கள் இரண்டு வகைகளில், அதாவது 3GB ரேம் களுடன் 32GB ஸ்டோரேஜ்களுடனும், 4GB ரேம் களுடன் 64GB ஸ்டோரேஜ்களுடனும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்டோரேஜ்-ஐ 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டுகள் மூலமாக அதிகரித்து கொள்ள முடியும்.

இந்த டிவைசில் முன்புறமாக 8 மெஹா பிக்சல் பிரான்ட் கேமராவுடன் f/2.2 அப்ப்ச்சர்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி டூயல் ரியர் கேமரா செட்அப் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது 13 மெஹா பிக்சல் பிரைமரி சென்சார்கள் மற்றும் 2-மெஹா பிக்சல் செகண்டரி சென்சார்களை கொண்டதாக இருக்கும்.

ரியல்மீ 2 ஸ்மார்ட் போன்களில் 4230mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்சன்களை பொறுத்தவரை, ப்ளூடூத் 4.2, வை-பை 802.11 a/b/g/n/ac, 3.5mm ஜாக், 4G LTE மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட்களும் இடம் பெற்றுள்ளன. இந்த போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் டைமன்ட் ரெட் கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.