ரியல்மி 3 , ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்புகள்.!

வரும் மார்ச் 4ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 4,230mAh பேட்டரியுடன், மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டிருக்கும். ரியல்மி3 டீசர் ஃபிளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரியல்மி 3 ப்ரோ மாடலும் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனம் ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் குறைந்த விலையில் சிறப்பான வசதிகளை கொண்ட போனை அறிமுகம் செய்வதில் சிறப்பாக செயல்படுகின்றது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அமைப்புகள்

பொதுவாக இந்நிறுவன ஸ்மார்ட்போன்கள் டியூ-டிராப் நாட்ச் (வாட்டர் டிராப்) டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் பின்புறத்தில் டைமண்ட் கட் வடிவமைப்பு டிசைனை பெற்றிருக்கும். இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 3 , ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்புகள்.!

மிக வேகமாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 4,230mAh பேட்டரியை பெற்றிருக்கும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றி கலர்ஓஎஸ் 6 அம்சத்துடன் செங்குத்தான நிலையில் இரட்டை கேமரா வசதி வழங்கப்பட்டு, அதன் நேராக கீழே ரியல்மி லோகோ இம்பெற்றிருக்கும்.  செல்பீ மற்றும் வீடியோ காலிங் கேமரா மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சாருடன் இணைந்த இந்த போன் நம்ப இயலாத மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக டீசர் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி 3 விலை மற்றும் விற்பனை தொடர்பான விபரங்கள் மார்ச் 4ந் தேதி தெரியவரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிசையில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இடம்பெறலாம்.

ரியல்மி 3 , ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்புகள்.!