Realme 3 Price in India : இந்தியாவில் ரூபாய் 8,999 ஆரம்ப விலையில் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் மீண்டும் இரவு 8 மணிக்கு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் விற்பனைக்கு கிடைத்தது. 4230mAh பேட்டரி கொண்ட இந்த போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரு மாடல்களில் கிடைகின்றது.

முதல் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரியல்மி 3 போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பை கொண்ட மாடல் ரூபாய் 8,999 எனவும், மற்றொரு ரியல்மி 3 போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பை கொண்ட மாடல் ரூபாய் 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Realme 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்புகள்

சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுக்கு சவாலினை வழங்குகின்ற ரியல்மி 3 போனில் உள்ள சில முக்கிய வதிகளை அறிந்து கொள்ளலாம்.

ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல டியூடிராப் டிஸ்பிளே அம்சத்துடன் 3டி கிரேடியன்ட் யூனிபாடி அம்சத்துடன் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட் உடன் கூடிய செயற்கை அறிவுத்திறன் ஆதரவுடன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக வந்துள்ளது.

கேமரா பிரிவில் செயற்கை அறிவுத்திறன் எனப்படுகின்ற AI கொண்டதாக விளங்கும் இதில் டுயல் கேமரா செட்டப் 13 எம்பி உடன் 2 எம்பி சென்சார் ஆதரவை கொண்டுள்ளது. இதில் செல்ஃபி பிரிவில் 13 எம்பி சென்சார் பெற்றதாக வந்துள்ளது.

இந்த போனில் 4,230mAh பேட்டரியுடன் அமைந்துள்ளது. இதில் 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, OTG, மற்றும் ப்ளூடுத் போன்றவை பெற்றுள்ளது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை பட்டியல்

ரியல்மி 3 மொபைல் போன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி 8,999 ரூபாய்க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 10,999 ஆகும்.

இன்று நண்பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் கிடைத்த நிலையில் மீண்டும் தற்போது இரவு 8 மணிக்கு இதே தளத்தில் கிடைக்க உள்ளது.

ரியல்மி ஹோலி தின விற்பனை தொடக்கம்

நாளை மார்ச் 13ந் தேதி முதல் மார்ச் 15 தேதி வரை ரியல்மி ஹோலி டே சேல் என்ற பெயரில் ரியல்மி C1 (2019) மாடலில் ரூ. 7,499  2GB RAM/32GB  சேமிப்பு மாடல் மற்றும் ரூ. 8,499 விலையில் 3GB/32GB மாடல் கிடைக்கும். இதுதவிர ரியல்மி யூ1 போனுக்கு ரூ.1000 தள்ளுபடி மற்றும் ரியல்மி 2 ப்ரோ மாடல் ரூ.11,990 விலையில் கிடைக்க தொடங்குகின்றது.