ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு

இந்தியாவில் செயல்படுகின்ற ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி பிராண்டில் வரவுள்ள ரியல்மி 3 மொபைல் போன் மாடல் மார்ச் 4ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக இந்நிறுவன இந்தியப் பிரிவு தலைவர் மாதவ் சேத் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் ரக மாடல்கள் இந்திய சந்தையில் அமோக ஆதரவை பெற்று வரும் நிலையில் அடுத்த ஸ்மார்ட்போன் டைமன்ட் கட் டிசைன் பெற்றதாக வரவுள்ளது.

ரியல்மி 3 மொபைல் போன் சிறப்புகள்

ரியல்மி 3 மொபைல் போனில் பின்புறத்தில் பிரைமரியாக டூயல் கேமரா கொண்டு பேனல் மிக நேர்த்தியான முறையில் டமன்ட் கட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த மொபைலில் பின்புறத்தில் கைரேகை சென்சாருடன், மீடியாடெக் ஹீலியோ பி70 அல்லது பி60 சிப்செட் கொண்டதாக செயல்படும் என தெரிகின்றது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த மொபைல் பற்றி மேலதிக விபரங்கள் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை. எனவே இது தொடர்பான விபரங்கள் இனி அடுத்தடுத்து வெளியாகக்கூடும் என தெரிகின்றது. பட்ஜெட் ரக சந்தையில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கிடையே உள்ள கடுமையான போட்டியில் ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களும் மிக சிறப்பான மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டு வருகின்றன.