இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் அடுத்த ரியல்மி 3 மொபைல் போன் விற்பனைக்கு வரவுள்ளதாக டீசர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 48 எம்பி கேமராவினை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 3 ஸ்மார்ட்போன் வருகையா

ரியல்மி நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் கணக்கில் “Let’s see if you can put 1 and 2 together” என மூன்றாவது மாடலுக்கான டீசரை இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த மொபைல் போன் பற்றி எந்த நுட்ப விபரங்களும் கிடைக்கப் பெறவில்லை.

சமீபத்தில் முன்னணி டெக் வலைதளம் ஒன்று வீடியோ டீசரை வெளியிட்டிருந்தது. இதில் சமீபத்தில் வெளி வந்த ஹிட்டான பாலிவுட்  கல்லி பாய் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரேப் நடனத்தை போன்ற வீடியோவில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி தோன்றும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகார்வப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரியல்மி நிறுவனமானது பிரசத்தி பெற்ற சீன மொபைல் போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனத்தின் இந்திய பிராண்டாகும். இந்த பிராண்டில் ரியல்மி 1, ரியல்மி 2 உட்பட ரியல்மி சி1 , ரியல்மி யூ1 போன்ற மொபைல் போன்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றன. இந்த வரிசையில் புதிதாக வரவுள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 48 எம்பி கேமரா கொண்டதாக ரெட்மி நோட் 7 மொபைலுக்கு சவாலானதாக விளங்கலாம் என கூறப்படுகின்றது.