இந்தியாவில் 8,999 ரூபாய்க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரியல்மி 3 (Realme 3) போனில் டுயல் கேமரா செட்டப் பெற்று செயற்கை அறிவுத்திறன் கொண்டதாக வந்துள்ளது. ரியல்மீ 3 போனில் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 7 மாடலுக்கு மிகுந்த சவாலாக ரியல்மி 3 மொபைல் போன் விளங்குகின்றது. இந்த போனில் முன்புறத்தில் 13எம்பி செல்ஃபீ மற்றும் வீடியோ கால் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் சிறப்புகள்

ஒப்போ நிறுவனத்தின் பிராண்டாக செயல்படும் ரியல்மி இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்புகளை கொண்ட மொபைல்போனை ரெட்மி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக விற்பனை செய்து வருகின்றது.

இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள ரியல்மி 3 மொபைல் போனில் 6.2 அங்குல டியூடிராப் டிஸ்பிளே அம்சத்துடன் 3டி கிரேடியன்ட் யூனிபாடி அம்சத்துடன் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

ரியல்மீ 3 போனில் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் உடன் செயற்கை அறிவுத்திறன் ஆதரவுடன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக வந்துள்ளது.

கேமரா பிரிவில் செயற்கை நுண்ணறிவு கொண்டதாக விளங்கும் இதில் டுயல் கேமரா செட்டப் 13 எம்பி உடன் 2 எம்பி சென்சார் ஆதரவை கொண்டதாக வந்துள்ளது. இதில் செல்ஃபி பிரிவில் 13 எம்பி சென்சார் பெற்றதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட கலர் ஓஎஸ் 6.0 அடிப்படையில் செயல்படுகின்ற 4,230mAh பேட்டரியுடன் அமைந்துள்ளது. இதில் 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, OTG, மற்றும் ப்ளூடுத் போன்றவை பெற்றுள்ளது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை பட்டியல்

ரியல்மி 3 போன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி 8,999 ரூபாய்க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 10,999 ஆகும்.

மார்ச் 12ந் தேதி விற்பனைக்கு நண்பகல் 12.00 மணிக்கு விற்பனைக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் கிடைக்க உள்ளது. மேலும் ரியல்மி 3 ப்ரோ ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.