Home Tech News Mobiles Realme 3 Pro – ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம்

Realme 3 Pro – ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம்

இந்தியாவில் ஏப்ரல் 29ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் ஏப்ரல் 29 முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme 3 Pro சிறப்புகள்

ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கு மிகுந்த சவாலாக விளங்குகின்ற புதிய ரியல்மி  3 ப்ரோ போனில் மிக வேகமாக சார்ஜிங் செய்யப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பேட்டரி பெற்றுள்ளது.

6.3 அங்குல டிவ் டிராப்  IPS LCD 2.5D வளைந்த கிளாஸ் ( (2340×1080 பிக்சல்) பாதுகாப்பு உடன் கொரில்லா கார்னிங் கிளாஸ் 4 அம்சத்தை பெற்ற டிஸ்பிளேவுடன்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி என கிடைக்கப் பெறுகின்றது.

ரியல்மி 3 ப்ரோ போனின் கேமரா பிரிவில் பிரபலமான சோனி IMX519 சென்சார் திறனுடன் கூடிய 16 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 25 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 3 ப்ரோவின் 4045mAh பேட்டரி தொடர்பான அம்சத்தில் மிக முக்கியமாக VOOC 3.0 விரைவு சார்ஜர் பெற்றிருக்கும். இதன் காரணமாக 0-75 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் பெற்று விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Realme 3 Pro specifications

  • 6.3-inch (2340  × 1080 pixels) Full HD+ display, Corning Gorilla Glass 5 protection
  • Octa Core Snapdragon 710 10nm Mobile Platform (Dual 2.2GHz Kryo 360 + Hexa 1.7GHz Kryo 360 CPUs) with Adreno 616 GPU
  • 4GB (LPPDDR4x) RAM with 64GB storage / 6GB (LPPDDR4x) RAM with 128GB storage, expandable memory up to 256GB with microSD
  • Dual SIM
  • Android 9.0 (Pie)
  • 16MP rear camera with LED flash Sony IMX519 sensor, f/1.7 aperture, 5MP secondary rear camera with f/2.4 aperture, 960fps super slo-mo
  • 25MP front-facing camera with f/2.0 aperture
  • Fingerprint sensor
  • Dimensions:  156.8 x 74.2×8.3mm; Weight: 172g
  • 3.5mm audio jack, FM Radio
  • Dual 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, Micro USB
  • 4045mAh battery with VOOC 3.0 fast charging

Exit mobile version