ஏப்ரல் 22-ல் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - Realme 3 Pro

சமீபத்தில் இந்நிறுவன சிஇஓ வெளியிட்ட படங்களில் ஃபோர்ட்நைட் கேம் விளையாடும் திறன் பெற்ற மாடலாக ரியல்மி 3 ப்ரோ (Realme 3 Pro) விளங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த போனில் 48 எம்பி திறன் பெற்ற கேமரா இடம்பெற்றிருக்கும்.

சமீபத்தில் கிடைக்கப் பெற்ற சில அதிகார்வப்பூர்வமற்ற தகவலின் அடிப்படையில்  மிக முக்கியமானதாக Sony IMX519 கேமரா சென்சார் பிரைமரி வசதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரானது ஒன்பிளஸ் 6டி மொபைலில் இடம்பெற்றிருக்கின்றது.

ரியல்மி 3 ப்ரோ அறிமுக விபரம்

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ள ரியல்மி 3 புரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி என கிடைக்கப் பெறலாம்.

குறிப்பாக இந்த போனின் கேமரா பிரிவில் பிரபலமான ஒன் பிளஸ் 6டி மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற உயர் ரக சோனி IMX519 சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காணும்போது ரெட்மி நோட் 7 புரோவை விட சிறப்பான படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய இயலும் என கூறப்படுகின்றது.

ரியல்மி 3 ப்ரோவின் பேட்டரி தொடர்பான அம்சத்தில் மிக முக்கியமாக VOOC 3.0 விரைவு சார்ஜர் பெற்றிருக்கும். இதன் காரணமாக 0-75 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் பெற்று விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22-ல் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - Realme 3 Pro