புதிய Realme 3 Pro, Realme C2 போன் இன்றைக்கு விற்பனைக்கு அறிமுகம்

உயர் தரமான புகைப்படங்களை பெறும் நோக்கில் வெளியிடப்பட உள்ள Realme 3 Pro ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ரியல்மி 3 மாடலை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும்.

Realme 3 Pro போன் எதிர்பார்ப்புகள்

ரியல்மி 3 புரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி என கிடைக்கப் பெறலாம்.

குறிப்பாக இந்த போனின் கேமரா பிரிவில் பிரபலமான ஒன் பிளஸ் 6டி மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற உயர் ரக சோனி IMX519 சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காணும்போது ரெட்மி நோட் 7 புரோவை விட சிறப்பான படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய இயலும் என கூறப்படுகின்றது.

ரியல்மீ 3 ப்ரோவின் பேட்டரி தொடர்பான அம்சத்தில் மிக முக்கியமாக VOOC 3.0 விரைவு சார்ஜர் பெற்றிருக்கும். இதன் காரணமாக 0-75 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் பெற்று விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று., 12.30 மணிக்கு புதிய டெல்லியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மேலதிக விபரங்களை நேரலையில் காணுவதற்கு கீழுள்ள வீடியோ இணைப்பில் காணலாம்.

live stream begins – 12.30 pm