ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வருகை விபரம்

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இன்றைக்கு வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து வரவுள்ள ரியல்மி 3 ப்ரோவின் முக்கிய விபரங்களை ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ப்ரோ மொபைல் போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலுக்கு எதிராக ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனில் 48 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Realme 3 Pro போனின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ரெட்மி நோட் 7 ப்ரோவின் நேரடியாக மோத உள்ள ரியல்மி 3 ப்ரோ மாடலில் இடம்பெற உள்ள சிறப்புகளை பற்றி பெரிதாக எந்த விபரத்தையும் இந்நிறுவனம் வெளியிடாத நிலையில் நோட் 7 ப்ரோ மாடலுடன் ஒப்பீட்டுள்ளதால், அனேகமாக ரியல்மி 3 ப்ரோ போனிலும் 48 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கலாம்.

பிராசெஸர் , ரேம் உள்ளிட்ட எந்த விபரங்களையும் வெளியிடாத நிலையில், இந்த போனிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரியல்மி நிறுவனம் இந்த மாடலுக்கு  “Speed Awakens” என்ற கோஷத்தை வழங்கியுள்ளது. இந்த மாடல் கலர்ஓஎஸ் 6 மூலம் இயக்கப்பட உள்ளது.மேலும் ரியல்மி 3 ப்ரோ ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வருகை விபரம்

இன்றைக்கு வெளியிடப்பட்ட ரியல்மி 3 போனில் ஹீலியோ பி70 சிப்செட் பெற்று 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் பெற்றுள்ளது. முதலில் வாங்கும் 10 லட்சம் பயனாளர்களுக்கு மட்டும் இந்த விலை ஆகும்.

ரியல்மி 3 போன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி 8,999 ரூபாய்க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 10,999 ஆகும்.

மார்ச் 12ந் தேதி விற்பனைக்கு நண்பகல் 12.00 மணிக்கு விற்பனைக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் கிடைக்க உள்ளது.