Home Tech News Mobiles ரூ.6,999 விலையில் ரியல்மி 3i ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகும்

ரூ.6,999 விலையில் ரியல்மி 3i ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகும்

Realme 3I India Launch Details

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 3i விற்பனைக்கு ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரியல்மி 3i மொபைல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மொபைல் 6.22 அங்குல டியூட்ராப் டிஸ்பிளே இருப்பதுடன் இந்த மொபைலை இயக்க மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடலில் 3GB ரேம் உடன் 32GB மற்றும் 4GB ரேம் உடன் 64GB என இரு விதமான ஸ்டோரேஜ் பெற்றதாக விளங்கும். மேலும், மெமரி விரிவாக்கத்திற்காக பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கும்.

வரவிருக்கும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனில் 4230mAh  பேட்டரி கொண்டு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்று டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாக அமைந்திருக்கும் என கருதப்படுகின்றது.

இந்தியாவில் மிகவும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் வரிசைகளில் சியோமியை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை பெற்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. ரியல்மி 3 மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள ரியல்மி 3ஐ ஆரம்ப விலை 6,999 என தொடங்கலாம் என கருதப்படுகின்றது.

Exit mobile version