
ரூபாய் 7,999 ஆரம்ப விலை கொண்ட ரியல்மி 3i ஸ்மார்ட்போன் மாடலில் 3GB மற்றும் 4GB என இரு விதமாக ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ரியல்மி 3ஐ போன் விற்பனை ஜூலை 23 ஆம் தேதி பகல் 12.00 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் realme.com வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ரியல்மி 3 மாடலை பின்னணியாக கொண்ட இந்த 3i ஸ்மார்ட்போனில் 4230mAh பேட்டரி, 6.22 அங்குல டியூடிராப் டிஸ்பிளே, டூயல் கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் ப்ளூ,பிளாக் மற்றும் சிவப்பு என மொத்தமாக மூன்று விதமாக நிறங்களை பெற்றுள்ளது.
ரியல்மி 3i மொபைல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மொபைல் 6.22 அங்குல டியூட்ராப் டிஸ்பிளே 1520 x 720 பிக்சல்ஸ் இருப்பதுடன் இந்த மொபைலை இயக்க மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடலில் 3GB ரேம் உடன் 32GB மற்றும் 4GB ரேம் உடன் 64GB என இரு விதமான ஸ்டோரேஜ் பெற்றதாக விளங்கும். மேலும், மெமரி விரிவாக்கத்திற்காக பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கும்.
ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனில் 4230mAh பேட்டரி கொண்டு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்று AI ஆதரவை பெற்ற 13 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது, இந்த கேமரா 296 முக அங்கீகார புள்ளிகளை ஸ்கேன் செய்கிறது மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பியூட்டி எஃபெக்ட் வழங்குகிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட இந்த மாடல் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் கேமரா அமைந்திருக்கின்றது.

ரியல்மி 3i மொபைல் 32 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 3 ஜிபி ரேமுக்கு ரூ. 7,999 மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 4 ஜிபி ரேம் ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் மற்றும் realme.com ஆகியவற்றிலிருந்து ஜூலை 23 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.