Realme 5 Pro

ரியல்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதல் குவாட் கேமரா செட்டப் பெற்ற ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கேமரா உடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ, ஒப்போ ரெனோ மற்றும் ஒன்பிளஸ் 7 சீரிஸ் போன்ற மாடல்களில் இடம்பெற்றுள்ள சோனி IMX586 சென்சாரை அடிப்படையாக கொண்டதாக இடம்பெற உள்ள இந்த கேமரா ஆனது 48 எம் பிரைமரி, இரண்டாவது அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், மூன்றாவது சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவதாக டெப்த் சென்சாரும் இடம் பெற உள்ளது.

மேலும் இந்த மொபைலில் இடம்பெற உள்ள சிப்செட் ஸ்னாப்டிராகன் என்பது உறுதியாகியுள்ள. கூடுதலாக வெளிவந்த சில தகவல்களின் படி ரியல்மி 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ரியல்மி 5 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் இடம்பெறலாம் என கருதப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு பை ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் கொண்டு செயல்பட உள்ள ரியல்மி 5 விலை ரூ .8,999 என தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதே விலையில் தான் ரியல்மி 3 அறிமுகப்படுத்தப்பட்டது. புரோ மாடலின் விலை ரூ .15,000 க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 3 ப்ரோ ரூ .13,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ரியல்மி 5 ப்ரோ விலையும் இதன் அடிப்படையில் இருக்கலாம் என கருதப்படுகின்றது.