Realme 5 Pro

48 மெகாபிக்சல் உடன் மொத்தம் நான்கு கேமரா அல்லது குவாட் கேமரா செட்டப் பெற்ற ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி 5 என இரு ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு இந்தியாவில் 12.30 மணிக்கு ரியல்மி இந்தியா வெளியிட உள்ளது.

பிரபலமான மொபைல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சோனி IMX586 சென்சாரை அடிப்படையாக கொண்டதாக இடம்பெற உள்ள இந்த கேமரா ஆனது 48 எம் பிரைமரி, இரண்டாவது அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், மூன்றாவது சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவதாக டெப்த் சென்சாரும் இடம் பெற உள்ளது.

மேலும் இந்த மொபைலில் இடம்பெற உள்ள சிப்செட் ஸ்னாப்டிராகன் என்பது உறுதியாகியுள்ள. கூடுதலாக வெளிவந்த சில தகவல்களின் படி ரியல்மி 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ரியல்மி 5 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் இடம்பெறலாம் என கருதப்படுகின்றது.

கலர் ஓஎஸ் கொண்ட ரியல்மி 5 விலை ரூ .8,999 என தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதே விலையில் தான் ரியல்மி 3 அறிமுகப்படுத்தப்பட்டது. புரோ மாடலின் விலை ரூ .15,000 க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 5 India launch: watch live streaming here