மார்ச் 5.., ரியல்மி 6, ரியல்மி 6 புரோ மொபைல் விற்பனைக்கு அறிமுகம்

வரும் மார்ச் 5 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 புரோ என இரு ஸ்மார்ட்போன்களும் பல்வேறு சிறப்புகளுடன் குறிப்பாக டாப் மாடலான புரோ 64 எம்பி சென்சாருடன் குவாட் கேமரா ஆப்ஷனை பெற உள்ளது.

ரியல்மி புரோ 64 எம்பி கேமராவை (ரியல்மி 6 48 எம்பி) பிரைமரி சென்சாராகவும் குவாட் கேமரா சிஸ்டத்துடன், டெப்த் சென்சார், டெலிபோட்டோ சென்சார் மற்றும் மேக்ரோ சென்சாரை பெற உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் கேமராவை பொறுத்தவரை பஞ்சு ஹோல் டிசைன் பெற்று ஒற்றை செல்ஃபி கேமராவை ரியல்மி 6 மாடலும்,  ரியல்மி 6 புரோ மாடல் டூயல் பஞ்சு ஹோல் கொண்ட இரட்டை செல்ஃபி கேமராவினை பெற உள்ளது. இந்த மொபைலில் குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 720G சிப்செட் பெற்றிருக்கும். 

ரியல்மி 6 மாடலை பொறுத்தவரை முன்பே வெளிவந்த சில வை-ஃபை சான்றிதழ் தகவலின் படி, மீடியாடெக் ஹீலியோ G90 சிப்செட் கொண்டு இயக்கப்படும்

இரண்டு மொபைல்களுமே ஆண்ட்ராய்டு ஓஎஸ் 10 இயங்குதளத்தை பெற உள்ளது. அடுத்ததாக இந்த மொபைலின் பேட்டரி 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் அம்சத்தை கொண்டிருக்கும்.

வரும் மார்ச் 5ம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள இரு மாடல்ல்களில் ஆரம்பநிலை ரியல்மி 6 ரூபாய் 10,000-த்திற்குள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் ரியல்மி 6 புரோ ரூ.13,999 ஆக துவங்கலாம். இதுதவிர இந்நிறுவனம் ரியல்மி பேன்ட், ஸ்மார்ட் டிவி, பட்ஸ் போன்றவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளது.

மார்ச் 5.., ரியல்மி 6, ரியல்மி 6 புரோ மொபைல் விற்பனைக்கு அறிமுகம்