Realme 5

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ரியல்மி நிறுவனத்தின் அடுத்த மாடலாக வரவுள்ள ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சல் பிரைமரி சென்சாருடன் கூடிய குவாட் கேமரா செட்டப் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளதை இன்றைக்கு இந்நிறுவன சிஇஓ உறுதி செய்துள்ளார்.

இன்றைக்கு இந்நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டுள்ள டிவிட்டரில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக இருக்கும் என்ற நோக்கில் சல்மான் கானுடன் இணைந்து வெளியிட்ட புகைப்படத்தின் கீழ் இடம்பெற்றுள்ள வாட்டர் மார்கில் 64 எம்பி ஏஐ குவாட் கேமரா ரியல்மி 6 (64MP AI quad camera) என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 5 ஆம் தேதி ரியல்மி பல்வேறு ஸ்மார்ட் தயாரிப்புகளாக பேண்ட் உட்பட ஐஓடி போன்றவற்றை வெளியிட உள்ளதால் அன்றைக்கே புதிய ரியல்மி 6 அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து ரியல்மி 6 புரோ மற்றும் ரியல்மி 6ஐ என்ற குறைந்த விலை மாடலும் பிறகு விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.

ரியல்மி 6 மாடலை பொறுத்தவரை முன்பே வெளிவந்த சில வை-ஃபை சான்றிதழ் தகவலின் படி, மீடியாடெக் ஹீலியோ G90 சிப்செட் கொண்டு இயக்கப்படுவதுடன் குவாட் கேமரா செட்டப்பில் 64 எம்பி கேமரா பிரைமரி சென்சாருடன் மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா வைட் மற்றும் டெப்த் சென்சார் இடம்பெறுவதுடன், 5000 எம்ஏஹெச் பேட்டரி இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைல் ரூ.10,000 விலைக்குள் விற்ப்பனைக்கு வெளியாகலாம்.

குறைந்த விலை ரியல்மி 6i மாடலில் 48 எம்பி கேமரா பிரைமரி ஆப்ஷனாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.