ரூ.12,999க்கு ரியல்மி 6 மொபைல் போன் விற்பனைக்கு வெளியானது

ரூபாய் 12,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரியல்மி 6 புரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி என மூன்று ரேம் மாறுபாட்டில் 64 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

6.5 அங்குல தொடுதிரை (2400  × 1080 pixels) தீர்மானத்துடன் 20:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினை பெற்றுள்ளது.  சமீபத்திய மீடியாடெக் ஹீலியோ G90T 12 என்எம் சிப்செட் பெற்றுள்ள இந்த மாடலில் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் பெற்றுள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா வழங்கப்பட்டு அதில் 1 / 1.7 ″ சாம்சங் GW1 சென்சார், 8 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோ சென்சார் மற்றும் மேக்ரோ 2 மெகாபிக்சல் சென்சாரும் உள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் வசதிக்கு வழங்கப்பட்டு 16 மெகாபிக்சல் கேமராவை உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைப் பின்பற்றி ரியல்மி யூஐ ஓஎஸ் பெற்றுள்ள இந்த போனில் 4300mAh பேட்டரியுடன் 30W VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக மற்ற வசதிகளைப் பொறுத்தவரை, பக்கவாட்டில் கைரேகை சென்சார்,  இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, USB Type-C போன்றவையும் உள்ளது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இது பிளிப்கார்ட், realme.com இணையதளத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் விற்பனைக்கு ஆஃப்லைனிலும் கிடைக்க உள்ளது.

Realme 6  4 ஜிபி + 64 ஜிபி – ரூ.12,999

Realme 6  6 ஜிபி + 128 ஜிபி – ரூ.14,999

Realme 6  8 ஜிபி + 128 ஜிபி – ரூ.15,999