ரூ.16,999க்கு ரியல்மி 6 புரோ மொபைல் போன் விற்பனைக்கு வெளியானது

ரூபாய் 16,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரியல்மி 6 புரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் மாறுபாட்டில் 64 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

6.6 அங்குல தொடுதிரை (2400  × 1080 pixels) தீர்மானத்துடன் 20:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினை பெற்றுள்ளது.  சமீபத்திய ஸ்னாப்டிராகன் 720 ஜி 8 என்எம் சிப்செட் பெற்றுள்ள இந்த மாடலில் 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் பெற்றுள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா வழங்கப்பட்டு அதில் 1 / 1.7 ″ சாம்சங் GW1 சென்சார், 8 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சாரும் உள்ளது.

முன்புறத்தில் டூயல் கேமரா செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் வசதிக்கு வழங்கப்பட்டு 16 மெகாபிக்சல் கேமராவும், 8 மெகாபிக்சல் 105 ° அல்ட்ரா வைட் சென்சாரும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைப் பின்பற்றி ரியல்மி யூஐ ஓஎஸ் பெற்றுள்ள இந்த போனில் 4300mAh பேட்டரியுடன் 30W VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக மற்ற வசதிகளைப் பொறுத்தவரை,  இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, இரட்டை அதிர்வெண் (L1 + L5) GPS, இஸ்ரோவின் NavIC, USB Type-C போன்றவையும் உள்ளது.

ரியல்மி 6 புரோ நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கின்றது. இது பிளிப்கார்ட், realme.com இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Realme 6 Pro 6 ஜிபி + 64 ஜிபி – ரூ.16,999

Realme 6 Pro 6 ஜிபி + 128 ஜிபி – ரூ.17,999

Realme 6 Pro 8 ஜிபி + 256 ஜிபி – ரூ.18,999