ரியல்மி 7, ரியல்மி 7 புரோ டீசர் வெளியானது

ரியல்மி இந்தியா சிஇஓ வெளியிட்டுள்ள டீசரில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 புரோ என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளார். குறிப்பாக 7 வரிசை என்பதனை உறுதிப்படுத்த #BuildingTheFaster7  என்ற டேக்லைன் மூலமாக தெரிய வந்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள புதிய ரியல்மி 7 வரிசையில் இடம் பெற உள்ள நுட்பவிபரங்கள் குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தாலும் சில டிப்ஸெடர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, 7 புரோ மாடல் 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் 6GB+128GB மற்றும் 8GB+128GB வசதிகளை பெற்று மீடியாடெக் Dimensity 1000+ சிப்செட் கொண்டிருக்கலாம்.

குறைந்த விலை ரியல்மி 7 மாடல் 6GB +64GB, 6GB+128GB மற்றும் 8GB+128GB என மூன்று விதமான மாறுபட்ட சேமிப்புடன் 90Hz LCD டிஸ்பிளே கொண்டிருக்கலாம். மேலதிக விபரங்கள் இனி தொடர்ந்து கசிய வாய்ப்புகள் உள்ளது.