realme 64mp

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் 64 மெகாபிக்சல் கேமரா தொடர்பான நுட்பத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதே வேளை ரெட்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 64 எம்பி கேமரா தொடர்பான நுட்பம் சார்ந்த முக்கிய விபரத்தை வெளியிட உள்ளது.

சாம்சங் நிறுவனம் முதன்முறையாக 64 மெகாபிக்சல் கேமரா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தனது முதல் கேலக்ஸி A சீரிஸ் 64 மெகாபிக்சல் கேமரா மொபைலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ISOCELL GW1 எனப்படுவதுதான் இந்த கேமரா சென்சாரின் பெயர் ஆகும். இந்த நுட்பத்தை ரியல்மி மற்றும் ரெட்மி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரெட்மி எவ்வாறு 64 மெகாபிக்சல் கேமரா இயங்கும் மற்றும் அதன் விபரத்தை வெளியிட உள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ள புதிய அறிமுகம் தொடர்பான கூட்டத்தில், ரியல்மி நிறுவனம் முதல் 64 எம்பி குவாட் கேமரா டெக்னாலஜியுடன் தொடர்பான விபரத்தை வெளியிடுவதுடன், சீனாவில் இந்த நுட்பத்தை பெற உள்ள முதல் மாடலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.