அக்டோபர் 11ல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ C1
ரியல்மீ இந்தியா, புதிய தயாரிப்பான ரியல்மீ 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 13 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் ஐஸ் லேக், ப்ளூ ஓசான் மற்றும் பிளாக் லேக் என்ற மூன்று கலர்களில் வெளியாகி உள்ளதோடு, 4GB, 6GB மற்றும் 8GB என்ற மூன்று வகைகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, புதிதாக C1 என்ற பட்ஜெட் போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் அறிமுக விலை 6 ஆயிரத்து 999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் போன்கள் மெகா டிஸ்பிளே மற்றும் மெகா பேட்டரிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போனில் யூனிபாடி கிளாசி பேக் பேனல்களுடன் பிரிமியம் லூக்கை கொண்டுள்ளது.

அக்டோபர் 11ல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ C1

இந்த போனின் ஸ்பெசிபிகேஷனை பொறுத்தவரை, இந்த ரியல்மீ C1 போன்கள் 6.2 நாட்ச்டு முழு ஸ்கிரீன் டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆக்டோகோர் கோல்காம் ஸ்நாப்டிராகன் 450 சிப்செட்களுடன் 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெம்மரியை கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி 256GB வரை விரிவுபடுத்தி கொள்ளும் வகையிலான மைக்ரோஎஸ்டி கார்ட்டு ஸ்லாட் ஒன்று இதில் இடம் பெற்றுள்ளது. இதில் மூன்று கார்டு ஸ்லாட் உள்ளது. மேலும் இதில் டூயல் கேமரா மாடுல்களுடன் 13MP பிரைமரி சென்சார்கள் மற்றும் 2MP செகண்டரி சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

டிவைசின் முன்புறம் 5MP AI உடன் கூடிய பிராண்ட் கேமராகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் செல்பிகள் மற்றும் வீடியோ கால்கள் மேற்கொள்ள முடியும். இந்த போன்கள் கலர்ஒஎஸ் 5.1 கொண்டதாக இருக்கும். புதிய ரியல்மீ C1 ஸ்மார்ட் போனில் 4230 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 11ல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ C1

மேலும் இந்த போன்கள், 6.3 இன்ச் FHD+ டிஸ்பிளேவுடன் 19.5:9 அங்குல விகிதம் மற்றும் 2340 x 1080 பிக்சல் ரெசலுசன்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன்களும் கோல்காம் ஸ்நாப்டிராகன் 660AIE சிப்செட்களுடன் 8GB ரேம் மற்றும் 128 GB இன்பில்ட் ஸ்டோராஜ் கொண்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள கேமராக்களை பொறுத்தவரை, டூயல் கேமராகள் 16MP பிரைமரி லென்ஸ்களுடன் 2MP செகண்டரி ஷூட்டரையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உளது.