உயர்த்தப்பட்டது ரியல்மீ C1,  ரியல்மீ C2 விலை

ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை முறையே 1000 மற்றும் 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மீ சிஇஓ மாதவ் சேத் சமீபத்தில் வெயிட்ட டுவிட்டர் பதிவில், ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு குறித்து அறிவித்திருந்தார்.

உயர்த்தப்பட்டது ரியல்மீ C1,  ரியல்மீ C2 விலை

இதை தொடர்ந்து பிளிக்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த 2GB ரேம் + 16GB மெம்மரி கொண்ட ரியல்மீ C1 ஸ்மார்ட் போன்கள் 7,999 ரூபாய் விலையிலும் 2GB ரேம் + 16GB மெம்மரி கொண்டவை 6,999 ரூபாய் விலையிலும் கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. 4GB ரேம் கோணத் ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை 9,499 ரூபாயாக இருந்தது. இதில் 6GB வகைகளுக்கு எந்த விலை உயர்வும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மீ 2 போன்கள் 8,990 ரூபாய் விலையிலும், 4GB வகை போன்கள் 10,990 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்த்தப்பட்டது ரியல்மீ C1,  ரியல்மீ C2 விலை

ரியல்மீ C1 ஸ்மார்ட் போன்கள் , 6.2 நாட்ச் டிஸ்பிளே உடன், கோல்காம் ஸ்நாப்டிராகன் 45o ஆக்டோ-கோர் பிராசசர் கொண்டிருக்கும். மேலும் இந்த போன்களில் 4230 mAh பேட்டரிகளுடன் 13MP + 2MP டூயல் கேமரா கொண்டதாக இருக்கும்.

டூயல் சிம் ரியல்மீ 2 ஸ்மார்ட்போன்கள் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் இந்த மெம்மரி 256GB வரை விரிவு படுத்தி கொள்ளும் வசதி கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 13MP + 2MP டூயல் ரியர் கேமரா, 8 MP செல்பி கேமரா, ஸ்நாப்டிராகன் 450 சிப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இதில் 4230mAh பேட்டரி களுடன் ஆண்டிராய்டு மற்றும் ஒப்போ அடிப்படையிலான கலர்ஒஸ் 5.1 மூலம் இயங்கும்.