பட்ஜெட் விலை ரியல்மி C11 மொபைல் எதிர்பார்ப்புகள் என்ன ?

வரும் ஜூலை 14 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு ரூ.8,000 பட்ஜெட் விலையில் வரவுள்ள ரியல்மி C11 ஸ்மார்ட்போனில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து இங்கே அறிந்து கொள்ளலாம்

கடந்த வாரம் மலேசியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட சி11 ஸ்மார்ட்மொபைலில் உள்ள வசதிகளின் அடிப்படையிலான மாடல்தான் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 75 லட்சத்துக்கும் கூடுதலான ரியல்மி சி வரிசை வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

ரியல்மி C11

6.52 அங்குல திரையை பெற்று (1600 x 720 பிக்சல்ஸ்) HD+ 20:9 மினி டிராப் ஸ்டைலை கொண்ட ரியல்மி C11 மொபைல் போனில் கார்னரிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்புடன், 2.3GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் மூலமாக இயக்கப்பட்டு 2 ஜிபி LPDDR4x ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை ஆதரவுடன் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பெற்று ரியல்மி UI அடிப்படையினை கொண்டுள்ள சி11 போனில் டூயல் கேமரா ஆப்ஷனை பெற்ற பிரைமரியாக 13 மெகாபிக்சல் உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்கள் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை ரியல்மி C11 மொபைல் எதிர்பார்ப்புகள் என்ன ?

டூயல் நானோ சிம் கார்டுடன், ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ட் (P2i  கோட்டிங்), 3.5mm ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, வை-ஃபை 802.11 b/g/n, ஜிபிஎஸ், GLONASS மற்றும் யூஎஸ்பி போர்ட் போன்றவை உள்ளது. 10 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் கூடிய 5000mAh பேட்டரியை ரியல்மி C11 பெற்றுள்ளது.

ஜூலை 14 ஆம் தேதி 1 மணிக்கு வெளியிடப்பட உள்ள சி11 மொபைல் ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.