6ஜிபி ரேம் பெற்ற ரியல்மி C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய C17 ஸ்மார்ட்போன் மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்று குவாட் கேமரா ஆப்ஷனுடன் வந்துள்ளது. முந்தைய சி12 மாடலின் மேம்பட்டதாக வந்துள்ள சி17 பல்வேறு சிறப்புகளை கொண்டு பங்களாதேசில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள C17 போனில் 6.5 அங்குல HD+ பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் 90Hz ரிஃபெரஷ் ரேட் பெற்று 90% ஸ்கீரின் டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது.

ரியல்மி C17 கேமரா ஆப்ஷனில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் B&W சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி சென்சார் உள்ளது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த மாடலில் 5000mAh பேட்டரி உடன் 18W விரைவு சார்ஜர், டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி டைப் சி போர்ட் போன்றவை உள்ளது.

பங்களாதேசில் ரியல்மி C17 விலை இந்திய மதிப்பிற்கு தோராயமாக ரூ.13,885 ஆகும். இந்தியாவில் இன்றைக்கு ரியல்மி நார்சோ 20 சீரிஸ் விற்பனைக்கு வந்துள்ளதை தொடர்ந்து அடுத்த சில வாரங்களுக்குள் சி17 வெளியாகலாம்.