ரூ.5,999 விலையில் ரியல்மி C2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின், ரியல்மி C2 மொபைல் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு 3GB RAM, 2GB RAM என இரு விதமான ரேம் மாறுபாட்டில் மே 15 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரியல்மி C2 ஸ்மார்ட்போன்

6.1 அங்குல திரை அமைப்பினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனினை இயக்க மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் பயன்படுத்தப்பட்டு 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு என இரு விதமான மாறுபாட்டினை கொண்டிருக்கும்.

கேமரா பிரிவில் இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் என டூயல் கேமரா செட்டப் பெற்று, செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த போனில் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டு, 4G VoLTE, WiFi 802.11 a/b/g/n, ப்ளூடூத் 5.0, GPS போன்றவற்றை கூடுதலாக பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் அமைந்துள்ள ரியல்மி சி2 மொபைல் விலை ரூ. 5,999 (2 ஜிபி ரேம் +16 ஜிபி) மற்றும் ரியல்மி சி2 மொபைலின் 3 ஜிபி ரேம் +32 ஜிபி) விலை ரூ.7,999 ஆகும்.

ரூ.5,999 விலையில் ரியல்மி C2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

Realme C2 specifications

  • 6.22 அங்குல (1520 x 720 பிக்சல்ஸ்) 19.5:9 டீவ்டிராப் 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
  • 2GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm பிராசெஸர் 650MHz IMG PowerVR GE8320 GPU
  • 2GB RAM உடன் 16GB storage, 4GB RAM உடன்  32GB உள் சேமிப்பு
  • மைக்ரோ எஸ்டி கார்டு
  • கலர் OS 6.0 ஆனது ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
  • இரட்டை சிம் கார்டு
  • 13MP ரியர் கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ், மற்றும் 2MP கேமரா சென்சார்
  • 5MP முன்புற கேமரா
  • Dual 4G VoLTE, WiFi 802.11 a/b/g/n, ப்ளூடூத் 5.0, GPS
  • 4000mAh பேட்டரி