realme c3

ரூபாய் 6,999 விலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டப் பெற்றதாக வந்துள்ளது. இந்த மொபைலில் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

பட்ஜெட் விலையில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்று மிக நேர்த்தியாக 6.5 அங்குல ஹெச்டி பிளஸ் திரையை கொண்டு 20:9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் மிக நேர்த்தியாக 89.9 % பாடி டூ ஸ்கீரின் விகிதம் பெற்றுள்ளது. இந்த மொபைல் சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களை பெற உள்ளது.

பிராசெஸர் & ரேம்

ரியல்மி சி3 மொபைலை இயக்குவதற்கு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள யூஐ பெற்று மீடியாடெக் Helio G70 பிராஸெசர் பொருத்தப்பட்டு 3GB RAM + 32GB சேமிப்பு மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு என இரு விதமான மாறுபாட்டினை கொண்டுள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா டூயல் செட்டப் பெற்று மிக நேர்த்தியாக புகைப்படம் பெறும் வகையில் முதன்மையாக 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

வசதிகள்

ரியல்மி சி3 மொபைலை இயக்குவதற்கு 5,000 mAh பேட்டரி மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்டை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை நானோ-சிம் கார்டுகள், VoLTE ஆகியவை அடங்கும். 2.4 ஜி வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் பல. ஆன்-போர்டில் சென்சார்கள் ஜி.பி.எஸ், பீடோ, க்ளோனாஸ், ஏ-ஜி.பி.எஸ், காந்த தூண்டல் சென்சார், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி, கைரோ மீட்டர், அசிலோமீட்டர் ஆகியவை அடங்கும்.

ரியல்மி சி3

விலை

இந்தியாவில் ரியல்மி சி 3 விலை ரூ.6,999 முதல் தொடங்குகிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு கொண்டுது. அடுத்த டாப் ரியல்மி சி 3 மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.7,999 ஆகும்.

அறிமுக சலுகைகளைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.7,550 மதிப்புள்ள சலுகைகளைப் பெறலாம். முதல் விற்பனையின் போது வாங்குபவர்கள் பிளிப்கார்ட் வழியாக ரியல்மி சி3 இல் கூடுதல் ரூ.1000 வரை தள்ளுபடி பெறலாம்.