மே 11., ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10A அறிமுகமாகிறது

ரியல்மி 6 சீரிஸ் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்த இந்நிறுவனம் வெளியிட உள்ள நார்சோ சீரிஸ் (realme narzo 10) ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் மற்றும் டிரிப்பிள் கேமரா என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு மே 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனை நார்சோ 10 என்ற பெயரிலும், இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ரியல்மி சி3 என்ற மாடலை நார்சோ 10ஏ என விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

‘Next-Level Camera’ என்ற பெயரில் டீசர் வெளியிடப்பட்டுள்ள நார்சோவில் வரவுள்ள மாடல்கள் அதிகபட்சமாக 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் கூடுதலாக க்விக் சார்ஜ் ஆதரவினை பெற்றதாகவும், 6.5 இன்ச் ஸ்க்ரீன் உடன் 89.8% ஸ்ஈரின் டூ பாடி விகிதம் கொண்டதாக வரவுள்ளது.

சமீபத்தில் மியான்மரில் வெளியிடப்பட்டுள்ள ரியல்மி 6ஐ மாடலின் அடிப்படையில் குவாட் கேமரா செட்டப் பெற்ற மாடல் நார்சோ 10 என அழைக்கப்பட்டு 48 எம்பி பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா செட்டப் பெற்றிருக்கும்.

இந்த இரண்டு மாடல்களும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் அறிமுகமாக விற்பனைக்கு மே 11 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.