ரியல்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய நார்சோ 20A, நார்சோ 20 மற்றும் நார்சோ 20 புரோ (Realme Narzo 20 Pro, Narzo 20A, Narzo 20) என மூன்று மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 20 புரோ சிறப்புகள்
ரியல்மியின் நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிரீமியம் நார்சோ 20 புரோ மொபைல் 6.5 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 1080×2400 பிக்சல் தீர்மானத்துடன் 90Hz ஸ்கீரின் ரிஃபெரஷ் ரேட் உடன் 90.5 சதவீத ஸ்கீரின் டூ பாடி விகிதத்தை பெற்றிருக்கின்றது.
மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ ஜி95 மூலம் இயக்கப்படுகின்ற மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் பெற்றிருக்கின்றது.
குவாட் கேமரா செட்டப்பை பெறுகின்ற இந்த மாடலில் பிரைமரி ஆப்ஷனாக 48 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 எம்பி B&W போர்ட்ரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பெற உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 16 எம்பி சென்சாரை பெறுகின்றது.
4,500 mAh பேட்டரியை பெற உள்ள ரியல்மி நார்சோ 20 புரோ மொபைலில் 65 வாட்ஸ் விரைவு சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கின்றது. ரூ.14,999 முதல் ரூ.16,999 வரை கிடைக்கின்ற ரியல்மி நார்சோ 20 புரோ மாடல் செப்டம்பர் 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட், ரியல்மி இணையதளம் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 20 சிறப்புகள்
ரியல்மி நார்சோ 20 போனில் 6.5 அங்குல ஹெச்டி திரையுடன் 89.8% ஸ்கீரின் பாடி டூ விகிதம் கொண்டுள்ளது. டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள், மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 8 எம்பி சென்சாரை பெறுகின்றது.
மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ ஜி85 மூலம் இயக்கப்படுகின்ற மாடலில் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது.
நார்சோ 20 போனில் 6,000mAh பேட்டரியுடன் 18 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் வந்துள்ளது. ரூ.10,499 முதல் ரூ.11,499 வரை கிடைக்கின்ற ரியல்மி நார்சோ 20 மாடல் செப்டம்பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட், ரியல்மி இணையதளம் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 20A சிறப்புகள்
குறைந்த விலை நார்சோ 20A மாடல் 6.5 அங்குல 720×1,600 பிக்சல் எல்சிடி திரையுடன் 89.8% ஸ்கீரின் பாடி டூ விகிதம் கொண்டுள்ளது. டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் B&W லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ரெட்ரோ லென்ஸ் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 8 எம்பி சென்சாரை பெறுகின்றது.
குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 665 மூலம் இயக்கப்படுகின்ற மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் பெற்றிருக்கின்றது.
நார்சோ 20ஏ போனில் 5,000mAh பேட்டரியுடன் 10 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் அமைந்திருக்கின்றது. ரூ.8,499 முதல் ரூ.9,499 வரை கிடைக்கின்ற ரியல்மி நார்சோ 20ஏ மாடல் செப்டம்பர் 30 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட், ரியல்மி இணையதளம் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 20 சீரிஸ் விலை பட்டியல்
Realme Narzo 20 Pro 6GB+64GB – ரூ.14,999
Realme Narzo 20 Pro 8GB+128GB – ரூ.16,999
Realme Narzo 20 4GB+64GB – ரூ.10,499
Realme Narzo 20 4GB+128GB – ரூ.11,499
Realme Narzo 20A 3GB+32GB – ரூ.8,499
Realme Narzo 20A 4GB+64GB – ரூ.9,499