ரூ.16,999 விலையில் வரவுள்ள ரியல்மி நார்சோ 20 புரோ ஸ்மார்ட்போனின் விபரம் கசிந்தது

வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ 20 புரோ (Realme Narzo 20 Pro) ஸ்மார்ட்போன் மாடலின் விலை உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் கசிந்துள்ளது. நார்சோ 20 புரோவை தவிர நார்சோ 20, நார்சோ 20A என மொத்தமாக மூன்று மாடல்களை வெளியிட வாய்ப்புள்ளது.

ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நார்சோ 20 சீரீஸ் மாடல்களின் விலை விபரம் இந்நிறுவனத்தின் வர்த்தக விளம்பரத்தின் மூலம் கசிந்துள்ளது. ஆரம்ப நிலை வேரியண்ட் விலை ரூ.16,999 முதல் துவங்குகின்றது.

ரியல்மி நார்சோ 20 புரோ

நார்சோ 20 வரிசையில் வரவுள்ள பிரீமியம் நார்சோ 20 புரோ மொபைல் 6.5 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 1080×2400 பிக்சல் தீர்மானத்துடன் 90Hz ஸ்கீரின் ரிஃபெரஷ் ரேட் பெற்றிருக்கின்றது.

குவாட் கேமரா செட்டப்பை பெறுகின்ற இந்த மாடலில் பிரைமரி ஆப்ஷனாக 48 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 எம்பி B&W போர்ட்ரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பெற உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 16 எம்பி சென்சாரை பெறுகின்றது.

4K வீடியோ பதிவு ஆதரவுடன் 30fps திறனை கொண்டுள்ள இந்த மாடலில் மீடியாடெக் Helio G95 பிராசெஸர் கொண்டு 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆப்ஷனுடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கலாம்.

4,500 mAh பேட்டரியை பெற உள்ள ரியல்மி நார்சோ 20 புரோ மொபைலில் 65 வாட்ஸ் விரைவு சார்ஜிங் ஆதரவை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

நார்சோ 20 மற்றும் நார்சோ 20A

நார்சோ 20 வரிசையில் அடுத்தப்படியாக குறைந்த விலை நார்சோ 20A மாடல் 6.5 அங்குல எல்சிடி திரையுடன் 89.8% ஸ்கீரின் பாடி டூ விகிதம் கொண்டுள்ளது. டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல், மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 8 எம்பி சென்சாரை பெறுகின்றது.

நார்சோ 20ஏ போனில் 5,000mAh பேட்டரியுடன் 10 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 4ஜிபி ரேம் பெற்றிருக்கலாம்.

அடுத்ததாக , ரியல்மி நார்சோ 20 போனில் 6.5 அங்குல ஹெச்டி திரையுடன் 89.8% ஸ்கீரின் பாடி டூ விகிதம் கொண்டுள்ளது. டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள், மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 8 எம்பி சென்சாரை பெறுகின்றது.

நார்சோ 20 போனில் 6,000mAh பேட்டரியுடன் 18 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 4ஜிபி ரேம் பெற்றிருக்கலாம்.