பல்வேறு சலுகைகளுடன் "பிளிப்கார்ட் "பிக் பில்லியன் டேஸ் சேல்"-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ரியல்மீ நிறுவனம் இந்தாண்டு விழாகாலத்தில் தனது புதிய ரியல்மீ 2 புரோ மற்றும் ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாளை தொடங்கும் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

“பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் ரியல்மீ 2 மற்றும் ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித டிஸ்கவுன்ட் வழங்கப்பட உள்ளது.

ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்கள் 6,999 ரூபாய் விலையில் நாளை மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் பிரத்தியோகமாக விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 4230mAh பேட்டரி மற்றும் ஸ்நாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் பிரசாசர்களுடன் 6.2 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் முதல் முறையாக முழு நாட்ச் டிஸ்பிளே உடன் வெளியாக உள்ளது.

இன்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ டைமண்ட் எடிசன்கள் டைமண்ட் கட் டிசைனில் முதல் முறையாக முழு நாட்ச் டிஸ்பிளே கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்களில் AI டூயல் கேமரா மற்றும் பெரிய 4230mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 10 சதவிகித டிஸ்கவுண்ட் உடன், இந்த போனை 8 ஆயிரத்து 91 ரூபாய் விலையில் வாங்கி கொள்ளலாம்.

பல்வேறு சலுகைகளுடன் "பிளிப்கார்ட் "பிக் பில்லியன் டேஸ் சேல்"-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ

ரியல்மீ 2 புரோ போங்கள் ஸ்நாப்டிராகன் 660 AIE பிராசசர் மற்றும் 4GB ரேம் +64GB ரோம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 13,990 ரூபாயிலும், 6GB ரேம் +64GB ரோம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 15,990 ரூபாயிலும் மற்றும் 8GB ரேம் +128GB ரோம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 17,990 ரூபாயிலும் என முன்று வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்கள் ப்ளூ ஓசான், பிளாக் சீ மற்றும் ஐஸ் லேக் என மூன்று புதிய கலரில் வெளியாகியுள்ளது.

இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களையும், முழு மொபைல் பாதுகாப்பு செலவாக 99 ரூபாய் செலுத்தி “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் வாங்கி கொள்ளலாம். மேலும் இந்த மொபைல் போன்களை நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனிலும் ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கி 10 சதவிகித டிஸ்கவுன்ட் சலுகையையும் பெறலாம்.