ரியல்மி U1 ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி U1 மொபைல் போனின் கூடுதல் சேமிப்பு வசதி பெற்ற மாடலின் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10ந் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

முன்பாக ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் பெற்ற மாடலில் 32 ஜிபி சேமிப்பு வசதி , 4 ஜிபி ரேம் பெற்ற மாடலில் 32 ஜிபி சேமிப்பு கிடைத்து வரும் நிலையில் இந்த இரு மாடல்களுக்கு இடையில் புதிதாக வந்த மாடல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் வசதிகள் மற்றும் சிறப்புகள்

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. மொபைலின் டிஸ்பிளேவை பாதுகாக்கும் நோக்கில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ தளத்தை பின்பற்றி ஒப்போ கலர் ஓஎஸ் 5.2 பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டுள்ளது. இதில் 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் முறையே 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினை கொண்டுள்ளது.

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலில் 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பிரத்தியேகமான செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 25 மெகாபிக்சல்  கேமரா ஆதரவுடன் கூடுதலாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போனினை இயக்க 3500mAh பேட்டரி பெற்றுள்ளது.

3ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு உடன் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் புதிய விலை ரூ.9,999 , 3 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு உடன் கொண்ட மாடல் விலை ரூ.10,999 எனவும், 4 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 மொபைல் போனின் புதிய விலை ரூ.11,999 ஆகும்.

வரும் ஏப்ரல் 10ந் தேதி முதல் அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி நிறுவன மாடல்கள் 30 முன்னணி நகரங்களில் உள்ள 2500 ரீடெயலர்களிடம் கிடைக்கும்.