ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 விலை குறைப்பு

ஓப்போ நிறுவனத்தின் ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 வரை குறைந்து ரூ.10,499 க்கு ரும் ஜனவரி 2-ம் தேதி வரை மட்டும் விற்பனை செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளியாகி 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் திர்மானம் கொண்டதாக உள்ள இந்த மொபைலில் டிஸ்பிளேவினை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இடம்பெற்றுள்ளது. மீடியாடெக் ஹெலியோ P70 ஆக்டோ-கோர் சிப்செட் உடன் 3ஜிபி அல்லது4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அல்லது 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு வகைகளில் கிடைக்க உள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற யூ1 மொபைலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பத்துடன் கூடிய கேமராவை பெற்றுள்ளதால் மிக தெளிவான படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்ய 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவை கொண்டுள்ளது.

3,500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ள இந்த மாடலில் வைஃபை, ப்ளூடூத் V4.2, மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் 4ஜி வோல்ட்இ ஆதரவை கொண்டுள்ளது. இந்த மொபைல் போனில் நீலம், கருப்பு மற்றும் தங்கம் நிறத்தில் அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ரியல்மி U1 விலை பட்டியல்

ரியல்மி U1 3ஜிபி ரேம் / 16ஜிபி சேமிப்பு – ரூ.10,499

ரியல்மி U1 4ஜிபி ரேம் /  32ஜிபி சேமிப்பு – ரூ.12,999

ரூ.1500 குறைக்கப்பட்ட விலை பட்டியலாகும். மேலும் ரூ.1500 விலை குறைப்பு HDFC  கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.