ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு..!

ரூ.1000 வரை விலை குறைக்கப்பட்டு ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக ரூ. 5,750 மதிப்பிலான 4ஜி டேட்டா சலுகையை ஜியோ வழங்க உள்ளது. 30 நகரங்களில் உள்ள 2500 ரீடெயில்கள் வாயிலாக யூ1 மொபைலை இனி வாங்கலாம்.

ரியல்மி பிராண்டின் பிரசத்தி பெற்ற ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. மொபைலின் டிஸ்பிளேவை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி ஒப்போ கலர் ஓஎஸ் பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் ஹெலியோ P70 ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டுள்ளது. இதில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் முறையே 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினை கொண்டுள்ளது.

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலில் 16எம்பி மற்றும் 2எம்பி இரட்டை பின்புற கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பிரத்தியேகமான செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கு 25எம்பி  கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் கூடுதலாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்றுள்ளது.

இந்த மொபைல் போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பெற்றுள்ளது. தற்போது ரூ.1000 வரை வேரியன்ட் வாரியாக நிரந்தர விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் புதிய விலை ரூ.10,999 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 மொபைல் போனின் புதிய விலை ரூ.13,999 ஆகும்.

ஜியோ ஆப்பர்

நாடு முழுவதும் உள்ள 30 முன்னணி கரங்களில் உள்ள 2500 ரீடெலர்களிடம் கிடைக்க தொடங்கியுள்ள யூ1 மொபைல் மாடல் வரும் மார்ச் மாத இறுதிக்குள் 100 நகரங்களாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 150 நகரங்களாக விரிவுப்படுத்த ரியல்மி திட்டமிட்டுள்ளது.

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து ரூ.198 மற்றும் ரூ.299 திட்டங்கள் வாயிலாக சுமார் 4.2 TB டேட்டாவை ரூ.5,750 மதிப்பில் வழங்கப்பட்டு வருகின்றது.