சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிரசத்தி பெற்ற ஒப்போ நிறுவனம், இந்தியாவில் புதிய ரியல்மீ U1 என்ற ஸ்மார்ட் போனை வரும் 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போனில் இதுவரை ரியல்மீ போன்களில் இடம் பெறாத மீடியா டெக் ஹீலோ P70 SoC உடன் வெளியாக உள்ளது. இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு அமேசான் டாட் இன் இணைய தளத்தில் செல்பி புரே என்ற டேக் லைன் உடன் இந்த ஹெட்செட் குறித்த தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து பேசிய ரியல்மீ சிஇஓ, மாதவ் சேத், மீடியா டெக் ஹீலோ P70 SoC உடன் கூடிய ரீயல்மீ U1 விரைவில் அறிமுகமாக உளது. இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் 28ம் தேதி இரவு 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வாட்டர் டிராப்-ஸ்டைலில் நாடச் டிஸ்பிளே உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே ஒபோ F9 மற்றும் ஒன்பிளஸ் 6T போன்களில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது. மீடியா டெக் ஹீலோ P70 SoC கள் உயர்ந்த ரெசலுசன்கொண்டதாகவும், வேகமான மல்டி பிரேம் சத்தம் குறைப்பு, ஆண்டி புளுமிங் கொண்டதாக இருக்கும். இவை அக்டோ-கோர் சிப்களுடன் TSMC-யின் finFET பிராசசர் கொண்டதாக இருக்கும் என்றார்.