Realme X India

வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரியல்மி எக்ஸ் (Realme X) ஸ்மார்ட்போனில் சிறப்பு ஸ்பைடர்மேன் (Spider-Man: Far From Home) கிஃப்ட் பாக்ஸ் பெற்ற மாடலும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தனது டீசரில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ரியல்மி எக்ஸ் லைட் மற்றும் ரியல்மி எக்ஸ் என இரு விதமாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சமீபத்தில் வெளியான மார்வெல் ஸ்பைடர்மேன் திரைப்படத்துடன் இணைந்து ஸ்பைடர்மேன் எடிசனில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ரியல்மி X மொபைல் போனில் முதன்மையான கேமரா பிரிவில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. AI மூலம் ஆதரிக்கப்படும் கேமரா, சூப்பர் நைட் உள்ளிட்ட முறைகளை கொண்டுள்ளது.

இந்த கேமராவில் கூடுதலாக குறைந்த வெளிச்சத்தில் மிருதுவான மற்றும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. 720p தெளிவுத்திறனில் 960fps மற்றும் 1080p தெளிவுத்திறனில் 120fps இன் அல்ட்ரா ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவையும் கேமரா இந்த போன் மூலம் பெறலாம்.

realme x spiderman

அடுத்தப்படியாக, செல்ஃபி மற்றும் வீடியோ கால் முறைக்கு பாப் அப் முறையில் எழும்பும் 16 மெகாபிக்சல் சோனி IMX471 சென்சார் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் பெற்ற இந்த போனில் 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என மாறுபட்ட முறையில் 6.53 இன்ச் முழு எச்டி + எட்ஜ்-டு-எட்ஜ் AMOLED டிஸ்ப்ளே உடன் 19.5: 9 விகிதத்துடன், மற்றும் 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் வழங்கப்பட்டிருக்கும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பெற்ற Realme X போனில் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0  ஆதரவுடன் 3,765mAh பேட்டரி கொண்டிருக்கும்.

Realme X price in India