realme-x-india-launch-teased

பாப் அப் கேமரா பெற்ற மொபைலை ரியல்மி எக்ஸ் (Realme X) என்ற பெயரில் அடுத்த ஸ்மார்ட்போனை ரியல்மி மொபைல் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஆனியன் மற்றும் கார்லிக் என இரு விதமாக மாஸ்டர் டிசைனில் வெளிவரவுள்ளது.

கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் 4GB, 6GB மற்றும் 8GB ரேம் என மூன்று விதமாக விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்த மொபைல் போனின் விலை ரூ.18,000 முதல் ரூ.20,000 வரையில் அமைந்திருக்கும் என ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் குறிப்பிட்டுள்ளார்.

ரியல்மி எக்ஸ்

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மொபைல் போன், 6.53 இன்ச் முழு எச்டி + எட்ஜ்-டு-எட்ஜ் AMOLED டிஸ்ப்ளே உடன் 19.5: 9 விகிதத்துடன், மற்றும் 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் பாப் முறையில் எழும்பும் செல்பி கேமராவில் 16 மெகாபிக்சல் தீர்மானம் உள்ளது. இதற்கு சோனி IMX471 சென்சார் பயன்படுத்துகிறது.

பிரைமரி ஆப்ஷனில், இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. AI மூலம் ஆதரிக்கப்படும் கேமரா, சூப்பர் நைட் உள்ளிட்ட முறைகளை கொண்டுள்ளது.

இந்த கேமராவில் கூடுதலாக குறைந்த வெளிச்சத்தில் மிருதுவான மற்றும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. 720p தெளிவுத்திறனில் 960fps மற்றும் 1080p தெளிவுத்திறனில் 120fps இன் அல்ட்ரா ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவையும் கேமரா இந்த போன் மூலம் பெறலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் பெற்ற இந்த போனில் 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என மொத்தமாக மூன்று விதமாக வெளியாகலாம். இந்த போனில் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0  ஆதரவுடன் 3,765mAh பேட்டரி கொண்டிருக்கலாம்.