விரைவில், பாப் அப் கேமராவுடன் ரியல்மி X விற்பனைக்கு வரலாம்

சீனாவில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரியல்மி X ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை செய்வதற்கான பிஐஎஸ் சான்றிதழை பெற்றுள்ளது. இதன் மூலம் ரியல்மி X மொபைல் போன் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பிபிகே எலக்ட்ரானிக்ஸ் என்ற சைனா நிறுவனத்தை தலைமையாக கொண்டு ஒப்போ நிறுவனத்தின் துனை பிராண்டாக ரியல்மி விளங்குகின்றது. ஒப்போ,விவோ, ஒன்பிளஸ், ரியல்மி போன்ற நிறுவனங்களின் தலைமையாக பிபிகே எலக்ட்ரானிக்ஸ் விளங்குகின்றது.

ரியல்மி X பற்றி எதிர்பார்ப்புகள்

இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் பெற்ற 3,680mAh பேட்டரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் முதன்முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட மாடலாக வரவுள்ளது.

தற்போது வரை வெளியாகியுள்ள பல்வேறு தகவலின் அடிப்படையில் ரியல்மி எக்ஸ் மொபைல் போன் 6.5 அங்குல டிஸ்பிளே பெற்று விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் பாப் அப் செல்ஃபி கேமரா பெற்றிருக்கும். பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 எம்பி சென்சார் மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் என டூயல் கேமரா வசதியை கொண்டிருக்கும்.

ரியல்மி 3 ப்ரோ மாடலை பல இந்த மொபைல் போனில் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் வழங்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக விரைவான சார்ஜிங் அம்சத்தை ரியல்மி X  பெற்றிருக்கும்.