ரியல்மி X50 புரோ

இந்தியாவில் 5ஜி சேவை தொடங்குவதற்கு முன்பாகவே ரியல்மி X50 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகி உள்ளது. ரூ.37,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொபைலில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் நாளை விவோ நிறுவனத்தின் ஐக்யூ 5ஜி மொபைல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Realme X50 Pro 5G மாடலை இயக்குவதற்கு குவால்காம் நிறுவனத்தின் 5ஜி ஆதரவினை பெற்ற ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் பயன்படுத்தபட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இந்த சிப்செட்டை பெறுகின்ற மாடலாக இது விளங்குகின்றது. இந்த பிராசெஸருடன் 6GB ரேம் 8GB ரேம் மற்றும் 12GB ரேம் பெற்றுள்ளது.  இந்த மொபைலின் திரை 6.44- இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவுடன் 90Hz ரிஃபெரஷ் ரேட் மற்றும் 180Hz சேம்பிலிங் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவினை பொறுத்தவரை செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 எம்பி மறும் 8 எம்பி என டூயல் கேமரா ஆப்ஷன் மற்றும் பிரைமரி ஆப்ஷனில் குவாட்-பின்புற கேமரா அமைப்பினை பெற்றுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் சாம்சங் GW1 சென்சார், 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் கேமரா மற்றும்  2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.  இந்த மொபைலில் 20x ஹைப்ரிட் ஜூம் வசதியும் உள்ளது.

4,200mAh பேட்டரி பொருத்தப்பட்டு 65W SuperDart ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைப் பெறுகின்றது.

இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 50 புரோ 5 ஜி விலை ரூ.37,999  என ஆரம்ப நிலை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 50 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ .39,999. ரியல்மி 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை 44,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.