சாம்சங் பீதி சியோமி ரெட்மி மொபைல்கள் விலை ரூ.2500 குறைந்தது

புதிய சாம்சங் கேலக்ஸி எம்20, கேலக்ஸி எம்10 மொபைல் வரவினால் சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6, ரெட்மி 6A, மற்றும் ரெட்மி 6 ப்ரோ மொபைல்களின் அதிகபட்சமாக ரூ.2500 வரை விலை குறைத்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி மொபைல்களுக்கு அதிகபட்சமாக ரூ.2500 வரை சிறப்பு சலுகையை இரண்டு நாட்களுக்கு இந்நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் சாம்சங் வெளியிட்டிருந்த கேலக்ஸி எம் சீரிஸ் மொபைல்களின் வரவால் பட்ஜெட் ரக மொபைல் மீதான ஈர்ப்பு சாம்சங் மீது திரும்பியுள்ளது.

ஷியோமி ரெட்மி 6ஏ மொபைல் போன் 2ஜி ரேம் உடன் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.1500 குறைக்கபட்டு தற்போது ரூ. 6,499 க்கு கிடைக்கும்.

ஷியோமி ரெட்மி 6 மொபைல் போன் 3ஜி ரேம் உடன் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.2000 குறைக்கபட்டு தற்போது ரூ. 8,499 க்கு கிடைக்கும்.

ஷியோமி ரெட்மி 6 ப்ரோ மொபைல் போன் 3ஜி ரேம் உடன் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.2500 குறைக்கபட்டு தற்போது ரூ. 8,999 க்கு கிடைக்கும்.

ஷியோமி ரெட்மி 6 ப்ரோ மொபைலின் 4ஜி ரேம் உடன் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.2500 குறைக்கபட்டு தற்போது ரூ. 10,999 க்கு கிடைக்கும்.

இந்த விலை குறைப்பு தற்காலிமானதாக பிப்ரவரி 6 முதல் 8ந் தேதி வரை மட்டும் அமேசான் , ஃபிளிப்கார்ட் மற்றும் மீ.காம் தளங்களில் மட்டும் கிடைக்க உள்ளது.