Redmi 9 Series: சியோமி ரெட்மி 9, ரெட்மி 9A மற்றும் ரெட்மி 9C விலை, நுட்பவிபரம் கசிந்தது

பட்ஜெட் விலையில் சியோமி வெளியிட உள்ள ரெட்மி 9 சீரிஸ் மாடல்களில் முழுமையான நுட்ப விபரம் மற்றும் தோராயமான விலை தொடர்பான விபரங்கள் முழுமையாக கசிந்துள்ளது.

ரெட்மி 9 சீரிஸ் விலை

இந்த வரிசையில் ரெட்மி 9, ரெட்மி 9A மற்றும் ரெட்மி 9C என மொத்தம் மூன்று மாடல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரெட்மி 9A மாடல் ரூ.8,400 – ரூ.10,000 விலையிலும், ரெட்மி 9C மாடல் ரூ.10,900 – ரூ. 12,600 விலையிலும், இறுதியாக ரெட்மி 9 மாடல் ரூ.13,440 – ரூ. 15,100 -க்குள் அமையலாம் என தெரிய வந்துள்ளது.

ரெட்மி 9 மொபைல் விபரம்

பொதுவாக ரெட்மி 9 சீரிஸ் மாடல்களில் 6.53 அங்குல IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டு (1,080 x 2,400p) பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ G70 சிப்செட் பொருத்தப்பட்டு  4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9 பிரைமரி குவாட் கேமரா ஆப்ஷனில் முதன்மையாக 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 5 மெகாபிக்சல் டெலிபோட்டோ மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கும்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு, இரட்டை சிம் கார்டு, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5000mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,440 – ரூ. 15,100 -க்குள் அமையலாம்

ரெட்மி 9C மொபைல் விபரம்

புதிய ரெட்மி 9C மாடல்களில் 6.53 அங்குல IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டு (720 x 1,600p) பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் பொருத்தப்பட்டு  3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9சி பிரைமரி டூயல் கேமரா ஆப்ஷனில் முதன்மையாக 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கும்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு, இரட்டை சிம் கார்டு, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5000mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் விலை ரூ.10,900 – ரூ. 12,600 -க்குள் அமையலாம்.

Redmi 9 Series: சியோமி ரெட்மி 9, ரெட்மி 9A மற்றும் ரெட்மி 9C விலை, நுட்பவிபரம் கசிந்தது

ரெட்மி 9A மொபைல் விபரம்

பட்ஜெட் விலை ரெட்மி 9A மாடல்களில் 6.53 அங்குல IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டு (720 x 1,600p) பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் பொருத்தப்பட்டு  3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9ஏ பிரைமரி கேமரா ஆப்ஷனில் முதன்மையாக 13 மெகாபிக்சல் பெற்றிருக்கும். செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு, இரட்டை சிம் கார்டு, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5000mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.8,400 – ரூ.10,000 -க்குள் அமையலாம்