ரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி

வரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக விளங்க உள்ளது.

ரெட்மி 9 பவர் சிறப்புகள்

சீனாவில் கிடைக்கின்ற மாடலை போல நுட்பங்களில் அமைந்திருந்தாலும் டிசைன் மாற்றங்கள் பெற்றிருக்கலாம். ரெட்மி 9 பவர் மொபைலில் 6.53 இன்ச் FHD+ IPS LCD திரையுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் பெற்று 4 ஜிபி ரேம் உடன் அதிகபட்சமாக 128ஜிபி சேமிப்புடன் கூடுதலாக 512ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற மாடலில் சூப்பர் குவாட் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டு பிரைமரி ஆப்ஷனில் 48 எம்பி, 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 எம்பி கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

6000mAh பேட்டரியுடன் 20W விரைவு சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும், டூயல் சிம் கார்டு வசதியுடன் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி Type-C ஆகியவற்றை பெற்றிருக்கும்.