Redmi 9: ரெட்மி 9 மொபைல் ரூ.8,999 விலையில் அறிமுகம்

சியோமியின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடல் 5000mAh பேட்டரியுடன் டூயல் கேமரா ஆப்ஷனை பெற்றதாக ரூ.8,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி அமேசான் மற்றும் மீ இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பட்ஜெட் விலையில் மொபைல் வாங்குவோருக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை பெற்ற ரெட்மி 9 மாடலில் 4ஜிபி ரேம் கொடுக்கப்பட்டு 64 ஜிபி அல்லது 128 ஜிபி என இரு விதமான சேமிப்பை கொண்டிருக்கும். ஆராஎட்ஜ் டிசைனில் மிக சிறப்பான வகையில் கிரிப்னஸ் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 சிறப்புகள்

6.53 இன்ச் எச்டி + திரையில் 20: 9 திரை விகிதத்துடன் டாட் டிராப் ஸ்கிரீன் கொண்டுள்ள ரெட்மி 9 மொபைலை மீடியாடெக் ஹீலியோ  G35 சிப்செட் மூலம்  4 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவிதமான உள்ளடங்கிய சேமிப்புடன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக சேமிப்பிடத்தை 512 ஜிபிக்கு விரிவுபடுத்தலாம். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி MIUI 12 கொண்டுள்ளது.

பிரைமரி கேமரா ஆப்ஷனில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

5000mAh பேட்டரியுடன் 10w சார்ஜிங் பெற்றுள்ள ரெட்மி 9 மொபைலில் ஸ்போர்ட்டி ஆரஞ்சு, ஸ்கை ப்ளூ மற்றும் கார்பன் கருப்பு என மூன்று நிறங்களுடன் கைரேகை சென்சார், இரட்டை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 5, ஜிபிஎஸ் + GLONASS, மைக்ரோ யூ.எஸ்.பி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ போன்றவை உள்ளது.

ரெட்மி 9 விலை பட்டியல்

4ஜிபி + 64ஜிபி – ரூ.8,999

4ஜிபி + 128ஜிபி – ரூ.9,999