சியோமி ரெட்மீ K20

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய சியோமி ரெட்மீ கில்லர் சீரிஸ் அல்லது ரெட்மீ K20 போனில் இடம்பெற உள்ள முக்கிய விபரங்கள் மற்றும் வசதிகளை அறிந்து கொள்ளலாம். கே20 மாடல் ஆனது ஒன்பிளஸ் 7 மொபைலுக்கு சவாலாக விளங்கலாம்.

இந்தியாவில் மே 20,2019-ல் சியோமி நிறுவனம், 48 மெகாபிக்சல் புதிய ‘ரெட்மீ நோட் 7S’ மாடலை வெளியிட உள்ளது. “Flagship Killer 2.0” என்ற கோஷத்துடன் கில்லர் சீரிஸ் மொபைலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.

ரெட்மீ K20 சிறப்புகள்

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த போனில் பிரைமரி கேமரா ஆப்ஷனில் டிரிப்ள் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கும்.

48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல்  என மூன்று கேமரா ஆப்ஷனும், பாப் அப் முறையில் எழும்பும் 32 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

6.39 அங்குல ஹெச்டி திரையை பெற்று குறைந்த நாட்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் 6GB RAM/64GB சேமிப்பு, 6GB/128GB மற்றும் 8GB/256GB என மொத்தம் மூன்று வகையை கொண்டிருக்கலாம், மிக விரைவான ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 4,000mAh பேட்டரியை ரெட்மீ கே20 போன் பெற்றிருக்கலாம்.