இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம், புதிதாக ரெட்மி K20 வரிசை மொபைலை போகோ F2 என வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கில்லர் சீரிஸ் என்ற பெயரிலே விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ள படங்களை சியோமி இந்திய பிரிவு தலைவர் மனுகுமார் ஜெயின் வெளியிட்டுள்ளார்.
சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களின் அடிப்படையிலே புதிய கில்லர் வரிசை மாடல்களை இந்நிறுவனம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சியோமி ரெட்மி K20
இந்திய சந்தையில் தொடர்ந்து தனது பங்களிப்பை அதிகரித்தது வரும் சீனாவின் சியோமி நிறுவனம், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒன்பிளஸ் 7 வரிசை மொபைல்களுக்கு போட்டியாகவே தனது விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
Redmi K20 மற்றும் Redmi K20 Pro, என இரு மொபைல்களும் 6.39 அங்குல திரையை பெற்று OLED முழு HD+ அம்சத்துடன் பாப் அப் முறையில் எழும்பும் செல்ஃபி கேமரா ஆப்ஷனில் 20 மெகாபிக்சல் கேமரா சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டதாக கே20 ப்ரோ மாடலும் கே20 மாடல் 730 ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் பிரைமரி ஆப்ஷனில் பொதுவாக டிரிப்ள் கேமரா ஆப்ஷனுடன் வந்துள்ளது. குறிப்பாக ரெட்மி கே20 ப்ரோ போனில் 48எம்பி கேமரா சோனி IMX586 சென்சாரும், கே20 மாடலின் 48 மெகாபிக்சல் கேமராவுக்கு சோனி IMX582 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அல்ட்ரா வைட் ஏங்கிள் 13 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி சென்சார் என இரண்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Redmi K20 மற்றும் K20 Pro என இரு மாடல்களும் 4,000 mAh பேட்டரி பெற்றிருந்தாலும் ப்ரோ ரக மாடல் 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கே20 மாடல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள சியோமி ரெட்மி கே20 சீரிஸ் அறிமுக தேதி குறித்து விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய சந்தையில் சில வாரங்களுக்குள் வெளியாகலாம்.