வரும் பிப்ரவரி மாதம் 12ந் தேதி வெளியாக உள்ள 48 மெகாபிக்சல்ஸ் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் டீசரை ஷியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரெட்மி நோட் 7 மொபைல் விலை ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விபரம்

டிவிட்டரில் சியோமி இந்தியா பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் 48 மெகாபிக்சல்ஸ் மொபைல் போன் விற்பனைக்கு வருவதனை செய்துள்ளார். இது குறித்து சியோமி இந்திய துணை தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்

டிசைன் & டிஸ்பிளே

முந்தைய மெட்டல் டிசைனிலிருது ரெட்மி விடுபட்டு பின்புறத்தில் கிளாஸ் பெற்ற ரெட்மி நோட் 7 மொபைல்  6.3 அங்குல முழு ஹெச்டி பிளஸ் காட்சி திரையை பெற்ற 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பை பெற்று இதன் ஆஸ்பெக்ட் விகிதம்19.5:9  மற்றும் 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டுள்ளது.  நோட் 7 மொபைல் போன் மாடல் நீலம், கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற நோட் 7  மொபைல் போன் மாடலில் 3GB, 4GB மற்றும் 6GB ரேம் என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.. இதன் உள்ளடக்க மெமரி தேர்வு 3GB+32GB, 4GB+64GB மற்றும் 6GB+64GB என கிடைக்கின்றது.  மேலும் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 256GB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

கேமரா

இந்த மொபைல் போனின் உச்சபட்ச வசதியாக பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் இயங்கும் இரண்டு கேமராவை பெற்று 48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் என இரண்டும் அமைந்துள்ளது. முன்புறத்தில் செல்பீ படங்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுகின்ற ரெட்மி நோட் 7 போனில் மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வகையில் குவால்காம் க்விக் சார்ஜ் 4.0. உடன் கூடிய 4000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

மற்றவை

ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டில் முதன்முறையாக USB Type-C  போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, GPS, GLONASS மற்றும் USB Type-C port ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஷியோமி ரெட்மி நோட் 7  ஸ்மார்ட்போன் விலை

சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்மி நோட் 7 மொபைலின் விலை பட்டியல் பின் வருமாறு;-

ரெட்மி நோட் 7 3GB+32GB – 999 Yuan (ரூ. 10,200),

ரெட்மி நோட் 7 4GB+64GB – 1199 Yuan (ரூ. 12,200)

ரெட்மி நோட் 7 6GB+64GB – 1399 Yuan ( ரூ. 14, 250)

இந்தியாவில் ரெட்மி நோட் 7 மொபைல் போன் பிப்ரவரி மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ள மாடல்களின் விலை ரூ.9,999 முதல் ரூ.15,999 க்குள் அமைந்திருக்கலாம்.