இன்று, (ஏப்ரல் 10) நண்பகல் 12.00 மணிக்கு ரெட்மி நோட் 7 ப்ரோ (Redmi Note 7 Pro) ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. 6 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று பகல் 12.00 மணிக்கு mi.com மற்றும் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்பாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999 ஆகும்.
Redmi Note 7 Pro சிறப்புகள்
6.3 அங்குல FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.
செயற்கை அறிவுத்திறன் ஆதரவை பெற்ற ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
செயற்கை அறிவுத்திறன் புகுத்தப்பட்ட பிரைமரி தேர்வாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு இதில் சோனி IMX586 சென்சார் பயன்படுத்தி கூடுதலாக 5 எம்பி கேமரா சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ படங்களுக்கு என பிரத்தியேகான 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 4000mAh பேட்டரியை பெற்றுள்ளது.
Redmi Note 7 Pro விலை
ரெட்மி நோட் 7 ப்ரோ விலை ரூபாய் 13,999 (4ஜிபி +64 ஜிபி) மற்றும் ரூ.16,999 (6ஜிபி + 128 ஜிபி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனை Mi வலைதளம் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்றவற்றில் தொடங்கும்.