redmi-note-7-pro-and-redmi-note-7s-astro-white-colour

ஆஸ்ட்ரோ ஓயிட் என்ற புதிய நிறத்தை பெற்ற ரெட்மியின் நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல்களில் நிறத்தை தவிர எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

ரெட்மி நோட் 7 ப்ரோவில் 48 எம்பி சோனி IMX586 மற்றும் 5 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்றுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் செயல்பட்டு 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேம் மாடல் ரூபாய் 15,999, 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 எஸ்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற நோட் 7 மாடலில் 3GB, 4GB என மொத்தமாக இரு விதமான ரேம் மாறுபாட்டில்  கிடைக்கின்றது. இதன் உள்ளடக்க மெமரி தேர்வு 3GB+32GB, 4GB+64GB என கிடைக்கின்றது.  மேலும் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 256GB வரையிலான மைக்ரோ எஸ்டி ஆதரவு வழங்கப்படுள்ளது.

பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் இயங்கும் இரண்டு கேமராவை பெற்று 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டும் அமைந்துள்ளது. முன்புறத்தில் செல்பீ படங்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வகையில் குவால்காம் QuickCharge 4.0. உடன் கூடிய 4000mAh பேட்டரியுடன் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, GPS, GLONASS மற்றும் USB Type-C port ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 7S 3GB+32GB – ரூ. 10,999

ரெட்மி நோட் 7S 4GB+64GB – ரூ. 12,999