48 எம்பி கேமராவை பெற்ற ரெட்மி நிறுவனத்தின் நோட் 7 ப்ரோ ரூபாய் 13,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.3 அங்குல காட்சி திரையை பெற்ற இந்த போனில் மிக சிறப்பான பல்வேறு வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டில் வெளிவந்துள்ள நோட் 7 பல்வேறு அம்சங்களையும் போட்டியாளர்களை விட விலை குறைவானதாகவும் அமைந்திருக்கின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விபரங்கள்

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, சூரிய வெளிச்ச் அதிகமுள்ள இடங்களிலும் சிறப்பான காட்சி திரை, கண்களை பாதிக்காத திரை என்ற தரச்சான்றிதழ், ஐபோனை விட சிறந்த கேமரா தரம் என சில அம்சங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

6.3 அங்குல FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

கேமரா பிரிவில் ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் செயற்கை அறிவுத்திறன் புகுத்தப்பட்ட பிரைமரி தேர்வாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு இதில் சோனி IMX586 சென்சார் பயன்படுத்தி கூடுதலாக 5 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் சிறப்பு பிரபல ஆப்பிள் ஐபோன் Xs மாடலை விட 27.5 சதவீத கூடுதல் பிக்சல் திறனை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்படு செல்ஃபி மற்றும் வீடியோ படங்களுக்கு என பிரத்தியேகான 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவாக சார்ஜ் ஆகின்ற வகையில் குவால்காம் க்விக் சார்ஜ் 4 அம்சத்துடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 4000mAh பேட்டரியை ரெட்மி நோட் 7 ப்ரோ போன் பெற்றுள்ளது. 4ஜி வோல்ட்இ , யூஎஸ்பி Type-C port, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட அதரவுகளை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ விலை

ரெட்மி நோட் 7 ப்ரோ விலை ரூபாய் 13,999 (4ஜிபி +64 ஜிபி) மற்றும் ரூ.16,999  (6ஜிபி + 128 ஜிபி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனை Mi வலைதளம் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்றவற்றில் தொடங்கும்.

ரெட்மி நோட் 7 விலை ரூபாய் 9,999 (3 ஜிபி +32 ஜிபி) மற்றும் ரூ.11,999  ( 4 ஜிபி + 64 ஜிபி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனை Mi வலைதளம் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்றவற்றில் தொடங்கும்.

மேலும் சியோமி நிறுவனம், மீ ஸ்போர்ட்ஸ் ப்ளூடுத் ஹெட்செட் ஒன்றை ரூ.1499 விலையில் வெளியிட்டுள்ளது.