ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள 48 மெகாபிக்சல் கேமரா பெற்ற ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ ( Redmi Note 7 vs Redmi Note 7 Pro) ஸ்மார்ட்போன் மாடல்களில் எந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம் என குழப்பத்திற்கு தீர்வை இங்கே காணலாம்.

ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டின் பட்ஜெட் ரகத்தில் மிக சிறப்பான வசதிகள் மற்றும் நவீனத்துவமான அம்சங்களை வழங்குவதின் முன்னணியாக உள்ள ஷியோமி இந்தியாவின் நெ.1 மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகின்றது.

ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ

குறைந்த விலை நிறைந்த வசதிகள் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற சீனாவின் சியோமி போன்களில் ரெட்மி நோட் 7 வரிசை மாடல்கள் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro கேமரா

கேமரா பிரிவில் ரெட்மி நோட் 7 ப்ரோவில் 48 எம்பி சோனி IMX586 மற்றும் 5 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்றுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

அதே போல குறைந்த விலை ரெட்மி நோட் 7 போனில் 12 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

பிராசெஸர் மற்றும் ரேம் விபரங்கள்

ரெட்மி நோட் 7 ப்ரோவின் செயற்பாட்டுக்கு ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான MIUI 10 இயங்குதளத்தில் செயல்படும், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 AIE 14nm – ஆக்டா கோர் சிப்செட் பெற்று 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி அடுத்து 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என இரு வகையில் கிடைக்கின்றது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பெற்று 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி அடுத்து 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இருவகைகளிலும் உள்ளது.

ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

ரெட்மி நோட் 7 ப்ரோ Vs ரெட்மி நோட் 7 விலை பட்டியல்

9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியன்டின் 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

ரெட்மி நோட் 7 ப்ரோ Vs ரெட்மி நோட் 7 – வித்தியாசம்

நுட்பம் ரெட்மி நோட் 7 ப்ரோ ரெட்மி நோட் 7
டிஸ்பிளே 6.3-inch FHD+ வாட்டர் டிராப் டிஸ்பிளே 6.3-inch FHD+ வாட்டர் டிராப் டிஸ்பிளே
பிராசஸர் ஸ்னாப்டிராகன் 675 ஸ்னாப்டிராகன் 660
ரேம் 3GB மற்றும் 4GB ரேம் 4GB மற்றும் 6GB ரேம்
சேமிப்பு 32GB மற்றும் 64GB 64GB மற்றும் 128GB
ரியர் கேமரா 48 MP சோனி IMX586 + 5MP கேமரா 13MP கேமரா & 2MP கேமரா
முன் கேமரா 13 எம்பி கேமரா 13 எம்பி கேமரா
பேட்டரி 4000mAh (Gadgets Tamilan) 4000mAh
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 9 பை ஆண்ட்ராய்டு 9 பை
நிறம் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நீலம், சிவப்பு மற்றும் கருப்பு
விலை 3GB+32GB -ரூ.9,990 &  4GB+64GB – ரூ.11,990 4GB+64GB -ரூ.13,999 & 6GB+128GB – ரூ.16,999

REdmi note 7 pro vs redmi note 7