சியோமி ரெட்மி நோட் 7S

சியோமியின் துனை பிராண்டான ரெட்மி தனது ரெட்மி நோட் 7 தொடரில் புதிதாக சியோமி ரெட்மி நோட் 7எஸ் (Redmi Note 7S) மொபைலை இன்று (மே 20) பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ரெட்மி நோட் 7S போனில் 48 எம்பி பிரைமரி கேமரா ஆப்ஷனுடன் டூயல் கேமரா செட்டப் கொண்டதாக அமைந்திருக்கும். பின்புறத்தில் கை ரேகை சென்சார் கொண்டதாக அமைந்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7எஸ்

ரெட்மீ நோட் 7S மாடலில் 6.3-இன்ச் FHD+ திரை வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன், 19.5:9 என்ற திரை விகிதம் கொண்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டு வெளியாகலாம். மேலும், இதில் மிக விரைவான சார்ஜிங் வசதியுடன் கூடியதாக 4000mAh பேட்டரி கொண்டிருக்கும்.

கேமரா பிரிவில் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என டூயல் கேமரா செட்டப் பெற்று அடுத்தப்படியாக செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக இருக்கும்.

அறிமுக நிகழ்ச்சியாக நேரலையில் காண – https://in.event.mi.com/in/redmi-note-7s